சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட மும்பை வீரர்கள்..! ஐபிஎல் வரலாற்றில்...
பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் மோசடி; 6 லட்சம் போலி மனுக்களால் திட்டத்தை ரத்து செய்த மகா. அரசு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள பிரதமர் பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் ப்ரிமியம் தொகை பயிர்களுக்குத் தக்கபடி 1.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.
இதே காப்பீடுத் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு கடந்த 2023ம் ஆண்டிலிருந்து தலா ஒரு ரூபாய் ப்ரிமியத்தில் விவசாயிகளுக்கு வழங்கியது.
ஒரு ரூபாய் பயிர்க் காப்பீடுத் திட்டம் குறித்து மகாராஷ்டிரா அமைச்சர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

"பிச்சைக்காரர்கள் கூட ஒரு ரூபாய் வாங்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் ஒரு ரூபாய்க்குப் பயிர்க் காப்பீடு வழங்குகிறோம்" என்ற மகாராஷ்டிரா அமைச்சர் மாணிக்கராவ் தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் இத்திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு நடப்பதை மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் கண்டுபிடித்தது.
இதையடுத்து இச்சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு ரூபாய் பயிர்க் காப்பீடுத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்துள்ள பேட்டியில், ''ஒரு ரூபாய் பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் பல குளறுபடிகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான போலி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இத்திட்டத்தால் ஏழை விவசாயிகள் பயனடைவதற்குப் பதில் காப்பீடு நிறுவனங்கள்தான் பயனடைகின்றன.
முறைகேடுகள் குறித்து விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் அறிக்கை கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இனி மத்திய அரசு நிர்ணயித்துள்ள பயிர்க் காப்பீடுத் தொகை வசூலிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
மாநில அரசு நடத்திய விசாரணையில், 5.9 லட்சம் போலி விண்ணப்பங்கள் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. பீட், சதாரா, பர்பானி, ஜல்காவ் மாவட்டத்தில்தான் அதிகப்படியான போலி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.
இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தால் மத்திய, மாநில அரசுகள் ப்ரிமியம் தொகையாக ரூ.478.6 கோடி செலுத்தி இருக்கவேண்டும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb