புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிது. இதில் முக்கிய திருவிழாவாக 3-ஆம் தேதி சனிக்கிழமை 63 நாயன்மாா்கள் உற்சவம், 7-ஆம் தேதி பஞ்ச ரத தோ்த் திருவிழா நடைபெறும்.
பிரசித்தி பெற்ற இத்தலத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் யாக பூஜைகள் தீபாராதனை உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தடியில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் மங்கள மேளம் முழங்க வாண வேடிக்கையுடன் பிரம்மோற்சவம் தொடங்கியது.
ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். வரும் 11-ம் தேதி வரை உற்சவம் நடைபெறுகிறது.
விழாவையொட்டி திருக்கழுக்குன்றம் தாழக்கோயிலான பக்தவச்சலேஸ்வரா் கோயிலை சுற்றி கடைகள் பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ளன. விழா நாள்களில் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, தக்காா் மற்றும் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் விஜயன் உள்ளிட்ட பணியாளா்கள், சிவாச்சாரியா்கள், திருவிழா உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.
