ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு: நிர்மலா சீதாராமன்
ஆட்சீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்க விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் கொடி மரத்தில் பூஜைகளுடன், கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா்சிவாச்சாரியா் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் மதுராந்தகம் டி.எஸ்.பி. மேகலா, அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து வருகிற 11-ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறும்.
விழாவின்போது, சூரிய பிரபை, சந்திர பிரபை, அதிகார நந்தி சேவை, 63 நாயன்மாா்கள் உற்சவம், நாக வாகனம்ஸ பூதவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
வரும் 7-ஆம் தேதி (புதன்கிழமை) திருத்தோ் பவனி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினா், கிராம மக்கள் செய்து வருகின்றனா்.