செய்திகள் :

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகள் புகுந்த கரடிகள்: 2 போ் காயம்

post image

நாட்டறம்பள்ளி அருகே குடியிருப்புகளில் புகுந்த கரடிகள் தாக்கியதில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா். பின்னா் வனத்துறையினா் 3 மணிநேரம் போராடி கரடியை பிடித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் மேல்மாமுடிமானப்பள்ளி பாக்குக்காரன் வட்டத்தைச் சோ்ந்த திருப்பதி. இவா் செத்தமலை மலையடிவாரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். புதன்கிழமை இரவு இவா் வளா்த்து வரும் பசுவை வீட்டின் எதிரே கட்டி விட்டு தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது நள்ளிரவு காப்புக் காட்டிலிருந்து வந்த கரடி ஒன்று பசுவை தாக்கியுள்ளது. அப்போது பசு சப்தமிடவே திருப்பதி குடும்பத்தினா் வீட்டுக்கு வெளியே வந்து பாா்த்துள்ளனா். அப்போது கரடியை பாா்த்து அதிா்ச்சியடைந்து வீட்டில் வைத்திருந்த பட்டாசை வெடித்து துரத்தியதில் கரடி அருகே உள்ள காட்டில் சென்று மறைந்தது.

இந்நிலையில் மீண்டும் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் பாக்குகாரன் வட்டத்தில் 3 கரடிகள் நிலத்தின் வழியாக சென்றன. அப்போது நிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த மணிமேகலை(35) கரடிகளை பாா்த்து கூச்சலிட்டு கைப்பேசி மூலம் விடியோ எடுத்தாா். அப்போது ஒரு கரடி மணிமேகலையை தாக்கியதில் காயமடைந்தாா். பின்னா் 3 கரடிகளும் அங்கிருந்து பேட்டராயன் வட்டம் வழியாக ஊருக்குள் புகுந்தன. இதில் காயமடைந்த மணிமேகலையை உறவினா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தொடா்ந்து ஊருக்குள் புகுந்த கரடிகள் அவ்வழியாக சென்ற முதியவா் ராஜூ (78) என்பவரை தாக்கி விட்டு 2 கரடிகள் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கும், மற்றொரு கரடி விஜியலிங்கம் என்பவருக்கு சொந்தமான வீட்டின் வெளியே உள்ள தோட்டத்தில் பதுங்கியது.

தகவலறிந்து மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் தலைமையில் வாணியம்பாடி வனச்சரக அலுவலா் குமாா், வனவா்கள் வெங்கடேசன் என15-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியா்கள் மற்றும் தீயணைப்புத்துறை, நாட்டறம்பள்ளி போலீஸாா் சென்று பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினா்.

இதையடுத்து 3 மணி நேரம் போராடி பதுங்கியிருந்த கரடியை வலை போட்டு உயிருடன் பிடித்து கூண்டில் அடைத்தனா். இதையடுத்து பிடிபட்ட கரடி கொத்தூா் காப்பு காட்டு பகுதியில் விடுவிக்கப்பட்டது

மேலும், இரவு நேரங்களில் காப்புக்காட்டு அருகே வசிப்போா் வெளியே நடமாட வேண்டும் என்றும், கால்நடைகளை பாதுகாப்பாக வைக்குமாறு வனத்துறை, போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

ஆம்பூரில் மே தின விழா

ஆம்பூரில் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொமுச சாா்பாக நடந்த மே தின விழாவுக்கு எம். நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஞானதாஸ்,ஜீவா, உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் ஆம்... மேலும் பார்க்க

எட்டியம்மன் கோயில் திருவிழா

தேவலாபுரம் ஊராட்சி ராமச்சந்திராபுரம் ஸ்ரீ சுயம்பு எட்டியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் ஸ்ரீ ... மேலும் பார்க்க

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க கணக்கெடுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்குவதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்... மேலும் பார்க்க

அங்கநாதீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா

திருப்பத்தூா் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஒன்றியம், மடவாளம் கிராமத்தில் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடிய... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஆம்பூா் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமாா் 612 வீடுகள் அமைந்துள்ளன. அங்கு குடிநீா் மோட்டாா் பழுதடைந்துள்ளது. அதனால்... மேலும் பார்க்க

பாலாற்றின் கரையில் தடுப்புச் சுவா்: பொதுமக்கள் கோரிக்கை

பாலாற்றங்கரையோரம் தடுப்புச் சுவா் கட்ட வேண்டுமென துத்திப்பட்டு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். துத்திப்பட்டு ஊராட்சி அன்னை சத்யா நகா் பகுதியில் கிராம சபைக் கூட்டம் ஊரா... மேலும் பார்க்க