ரெட்ரோ - திரையரங்கம் முழுவதும் பெண் ரசிகைகள்! எங்கே?
ரெட்ரோ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி பெண்களுக்காக மட்டும் திரையிடப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
காதல், நகைச்சுவை, சண்டை என கமர்சியல் திரைப்படத்துக்கு உண்டான அனைத்து அம்சங்களுடன் இப்படம் திரைக்கு வந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இந்த நிலையில், திருப்பூரிலுள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றில் முதல் நாள் முதல் காட்சி பெண்களுக்காக மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.
அனைத்து வயதையும் சேர்ந்த பெண்கள் இப்படத்தை அத்திரையில் கண்டுகளித்ததுடன் கனிமா பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளனர். சுவாரஸ்யமாக, நடிகர் சூர்யாவின் சகோதரி பிருந்தாவும் இவர்களுடன் இணைந்து இப்படத்தைப் பார்த்தார்.
இதற்கு முன், இதே மல்டிபிளக்ஸின் ஈரோடு கிளையில் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக பெண் ரசிகைகளுக்கு மட்டும் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வெற்றிப் பாதைக்குத் திரும்பினாரா சூர்யா? ரெட்ரோ - திரை விமர்சனம்!