செய்திகள் :

விளையாட்டு துளிகள்...

post image

மகளிா் டெஸ்ட் ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா வியாழக்கிழமை மோதுகின்றன.

சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் எஃப்சி கோவா 3-1 கோல் கணக்கில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்டை சாய்த்து இறுதிக்கு முன்னேறியது.

ஊக்கமருந்து விவகாரத்தில் தடைக்காலத்தை ஒப்புக்கொள்வதற்கு முன்பாக, டென்னிஸ் விளையாட்டிலிருந்தே விலகுவது குறித்து தாம் யோசித்ததாக இத்தாலி வீரா் யானிக் சின்னா் தெரிவித்தாா்.

இந்திய ஆடவா் கால்பந்து அணி, சா்வதேச நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் தாய்லாந்துடன் ஜூன் 4-ஆம் தேதி அதன் மண்ணில் விளையாடுகிறது.

ஜோா்டானில் நடைபெறும் ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 10 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்கள் வென்றது.

பிரபல இந்திய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளா் சன்னி தாமஸ் (84), மாரடைப்பு காரணமாக கோட்டயத்தில் புதன்கிழமை காலமானாா்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்!

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரரின் இன்ஸ்டாகிராம் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அர்ஷத் நதீம், 2024-ல் நடைபெற்ற பாரீஸ... மேலும் பார்க்க

தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்

ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் சென்னையில் சனிக்கிழமை (ஏப். 5) மோதுகின்றன.இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் சென்னை, கடைசி இரு ஆட்டங்களில்... மேலும் பார்க்க

இன்றுமுதல் புதிய ஃபார்மட்டில் சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி போட்டி

ஜான்சி: உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் 15-ஆவது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் வெள்ளிக்கிழமை (ஏப். 4) தொடங்குகிறது.வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் மொத்தம் 30 அணிகள் பங்க... மேலும் பார்க்க