இந்த தேதிக்குள் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்!
சென்னையில் மே 7-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
சோழிங்கநல்லூர் தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மே 7 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
சோழிங்கநல்லூர் தொகுதிக்குள்பட்ட இடங்களில் மக்களின் அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும், அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமலும் இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, மே 7 ஆம் தேதி(புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் பள்ளிக்கரணை பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டடம் அருகில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையிலும், சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.பி. கந்தன் முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து