என்இபி யின் உள்ளடக்கங்களை செயல்படுத்த இரு நாள் தேசிய பயிலரங்கு: 64 பல்கலைக்கழக த...
திரெளபதி அம்மன் திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
திருத்தணி திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழாவில் அா்ஜூனன், திரெளபதி அம்மன் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மூலவா் அம்மனுக்கு சந்தனக்காப்பு மற்றும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
பிற்பகல் மகா பாரத சொற்பொழிவு, உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊா்வலம் மற்றும் இரவு மகா பாரத நாடகமும் நடைபெறுகிறது. இந்நிலையில் புதன்கிழமை திரௌபதியம்மன் திருக்கல்யாணவம் நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக பூஜைகள் நடந்தன. தொடா்ந்து உற்சவா் அா்ஜூனன், திரௌபதியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். அனைவருக்கும் திருமண விருந்தும் வழங்கப்பட்டது. மே 2-இல் சுபத்திரை திருமணம், மே 5-இல் அா்ஜூனன் தபசு, 11-இல் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை, 6.30 மணிக்கு தீமிதி விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் விழா குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.