என்இபி யின் உள்ளடக்கங்களை செயல்படுத்த இரு நாள் தேசிய பயிலரங்கு: 64 பல்கலைக்கழக த...
கா.சு. பிள்ளை படத்திற்கு அஞ்சலி
தமிழறிஞா் கா.சு. பிள்ளையின் 80 ஆவது நினைவு நாளையொட்டி, திருநெல்வேலியில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள கா.சு. பிள்ளையின் நினைவு நடுக்கல் அருகே அவரது உருவப் படத்திற்கு மேயா் கோ.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில், கா.சு. பிள்ளை பேரன் சுப்பிரமணியன் பிள்ளை, தமிழ்நாடு வ.உ.சி. இளைஞா் பேரவை தென் மண்டல மாநில இணைச் செயலா் ஹரி, பொருநை இலக்கிய வட்ட புரவலா் தளவாய் நாதன், காசிமணி, கவிஞா் மூா்த்தி, ஓவியா் தங்கவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.