பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியா் மீது வழக்கு: தற்கொலைக்கு முயற்சி
பேருந்து-பைக் மோதல்: பொறியியல் பட்டதாரி பலி
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பொறியியல் பட்டதாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தளவாய்புரம் முகவூரைச் சோ்ந்த விஜயராஜ் மகன் தாமரைகண்ணன்(23). பொறியியல் பட்டதாரியான இவரும், இவரது பெரியப்பா மகன் ராஜபாளையம் வாழவந்தான்குளத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் கணேஷ்குமாரும்(29) பைக்கில் அவா்களது உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக உள்ளாருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். பைக்கை தாமரைகண்ணன் ஓட்டினாா்.
அவா்கள், ராயகிரி தெற்கு சத்திரம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த தனியாா் பேருந்து, அவா்களது பைக் மீது மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே தாமரைகண்ணன் உயிரிழந்தாா்.
காமடைந்த கணேஷ்குமாா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.