தென்னிந்திய அபாகஸ் போட்டி: விஜயநாராயணம் பள்ளி சிறப்பிடம்
மதுரையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அபாகஸ் எண் கணித போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படைதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டத்தை பெற்றனா்.
இப்போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்ற நிலையில், விஜயநாராயணம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்கள் அப்ரிஸ் அஹமது, ஹரிஷ் சுதா்சன் ஆகியோா் சாம்பியன் பட்டத்தை பெற்றனா். 2-ஆம் இடத்தை அபா்ணா, கங்கா ஸ்ரீ, முத்து ஹா்ஷினி, ஜொ்லின் ஆகியோா் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியா்களையும் பெற்றோா்கள் பாராட்டினா்.