செய்திகள் :

'ரிக்கி பாண்டிங் சொன்ன மெசேஜ்; நிதானமாக ஆடிய 10 பந்துகள்!' - சிஎஸ்கேவை வீழ்த்தியது பற்றி ஸ்ரேயாஷ்

post image

'பஞ்சாப் வெற்றி!'

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. போட்டிக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

Shreyas Iyer
Shreyas Iyer

'ஸ்ரேயாஷ் விளக்கம்!'

அவர் பேசியதாவது, 'சேஸ் செய்வது எனக்கு எப்போதுமே பிடிக்கும். பெரிய டார்கெட்களை சேஸ் செய்யும் போது என் மீது கூடுதல் பொறுப்பு இருப்பதை உணர்ந்து ஆடுகிறேன். பெரிய டார்கெட்டாக இருந்தால் உள்ளூர் மைதானம் வெளியூர் மைதானம் என்ற வேறுபாடெல்லாம் இல்லை.

நான் களத்தில் நின்றால் என்னால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என தெரியும். இதற்காக வலையில் அதிகமாக பயிற்சி செய்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக புதிய பந்தில் அதிகம் ஆடுகிறேன். அதன் பலன்தான் இது. இன்று நான் களத்துக்குள் வரும்போது கொஞ்சம் பார்த்து நின்று ஆட நினைத்தேன்.

Shreyas Iyer
Shreyas Iyer

முதல் 10 பந்துகளுக்கு நேரம் எடுத்துக்கொண்டேன். அதன்பிறகு அட்டாக் செய்ய தொடங்கினேன். இடையில் ரிக்கி பாண்டிங் ஒரு மெசேஜை சொன்னார். போட்டியை கடைசி வரை கொண்டு செல்லாமல் சீக்கிரம் முடிக்க சொன்னார். சென்னை அணியில் கலீல் அஹமது, பதிரனா போன்ற சிறந்த டெத் பௌலர்கள் இருப்பதை நாங்கள் அறிந்திருந்தோம். எங்களின் பேட்டிங்கை நம்பி அவர்களின் சிறந்த பௌலர்களை அட்டாக் செய்வதுதான் எங்களின் திட்டம்.' என்றார்.

Dhoni : 'அந்த 7 பந்துனாலதான் தோத்தோம்!' - தோல்விக்கு தோனி சொல்லும் காரணம்!

'சென்னை தோல்வி!'சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்ந... மேலும் பார்க்க

`மேலும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பினேன்... ஆனால்..!’ - சானியா மிர்சா சொல்லும் காரணம் என்ன?

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால் சானியா மிர்சாவிற்கும் அவரது கணவருக்கும் ... மேலும் பார்க்க

CSK : இந்த 5 கேள்விகள்... பதில் சொல்வாரா 'கேப்டன்' தோனி?

'சொதப்பும் தோனி!'சென்னை அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி. ஏறக்குறைய இந்த அணியின் ப்ளே ஆப்ஸ் வாய்ப்புகள் முடிந்துவிட்டது. எஞ்சியிருக்கும் சொற்ப வாய்ப்பையும் அடுத்தப் போட்டியில் அவர்களே முடித்தும் வைத்துவிடு... மேலும் பார்க்க