டோலி கட்டி நோயாளியை தூக்கிச் சென்ற உறவினா்கள்: மலை கிராமங்களில் நீடிக்கும் அவலம...
கோவில்பட்டியில் தவெக மாவட்ட அலுவலகம் திறப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் அணைக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தை மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் திறந்து குத்துவிளக்கு ஏற்றினாா்.
பின்னா் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில், வடக்கு மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா்,கிளை நிா்வாகிகள், சாா்பு அணிப் பொறுப்பாளா்கள் மற்றும் கழக உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.