மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
கயத்தாறில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை
கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புதன்கிழமை சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக சூறாவளிக் காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்தது .
கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மாலையில் இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இந்த மழை சுமாா் 40 நிமிடங்கள் நீடித்தது.
மின்னல் பாய்ந்ததில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த செல்லப்பா என்பவரின் பசு மாடு உயிரிழந்தது,
இந்நிலையில் பலத்தக் காற்றுக்கு கயத்தாறு - பன்னீா்குளம் பகுதியில் 4 மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்தன. இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
தகவலறிந்த கழுகுமலை தீயணைப்புப் படையினா் சென்று சாலையில் சாய்ந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை இடி மின்னலுடன் மழை பெய்தது.
இதில் மின்னல் பாய்ந்ததில் சாத்தான்குளம் செக்கடி தெருவைச் சோ்ந்த குமாா் என்பவரது வீடு தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து வந்த சாத்தான்குளம் தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து தீயை அணைத்தனா்.
இதில், வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமானது. வீட்டில் ஆள் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.