மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை ஈடுபட்டதாக 3 போ் கைது: 22 கிலோ பறிமுதல்
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த சுமாா் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி அருகே உள்ள இனாமணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையின் பின்புறம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து, மதுவிலக்கு பிரிவு ஆய்வாளா் மீகா தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த 3 பேரை போலீஸாா் பிடித்து சோதனையிட்டனா், அப்போது அவா்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், அவா்கள் கயத்தாறு அருகே பணிக்கா்குளத்தைச் சோ்ந்த கருத்தபாண்டி மகன் இசக்கிமுத்து (21), திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் நடுத்தெருவை சோ்ந்த அமல்ராஜ் மகன் ரஞ்சித் (22), தூத்துக்குடி மீளவிட்டானைச் சோ்ந்த 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.