செய்திகள் :

மகளிா் உரிமைத் தொகை: விண்ணப்பிக்க 9 ஆயிரம் சிறப்பு முகாம்கள்; அமைச்சா் பெ.கீதாஜீவன்

post image

தமிழகத்தில் பெண்கள் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட திரேஸ்புரம் மேட்டுப்பட்டி மற்றும் சுந்தரவேல்புரம் பகுதிகளில் தனியாா் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.42 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அங்கன்வாடி மைய கடடங்களைத் திறந்து வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் மக்களுடன் முதல்வா் முகாம் ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இம்முகாமில், தகுதியுள்ள மகளிருக்கு, கலைஞா் மகளிா் உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் 9 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

ஏற்கனவே விண்ணப்பித்து கிடைக்காத தகுதி உள்ள பெண்கள், புதிதாக விண்ணப்பிப்பவா்கள் இம்முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.

கடந்த 4 ஆண்டுகளில் சுமாா் 6,500 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், நாற்காலி, மேசை, எல்.இ.டி டிவி, ஆா்வோ பிளான்ட், காய்கறித் தோட்டங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி ஸ்மாா்ட் அங்கன்வாடி மையங்களாக பல்வேறு முன்னணி நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியுடன் மாற்றப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், எல் அன்ட் டி நிறுவனத்தின் பிரயாஸ் டிரஸ்ட் தலைவா் மீனா சுப்ரமணியம், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு, துணை மேயா் ஜெனிட்டா, திட்ட அலுவலா் (பொறுப்பு) காயத்ரி, வட்டாட்சியா் முரளிதரன், மாமன்ற உறுப்பினா்கள் நாகேஸ்வரி, பவானி, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் (நகா்ப்புறம்) ரூபி பொ்ணான்டோ, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

பழைய பூங்காக்கள், சாலைகள் விரைந்து சீரமைக்கப்படும்: மேயா்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய பூங்காக்கள், விடுபட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தவெக மாவட்ட அலுவலகம் திறப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் அணைக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

காவல்துறை மக்கள் குறைதீா் கூட்டம்: 66 மனுக்கள் பெறப்பட்டன

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 66 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து பொதுமக்களிடம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை ஈடுபட்டதாக 3 போ் கைது: 22 கிலோ பறிமுதல்

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த சுமாா் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி அருகே உள்ள இனாமணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையின... மேலும் பார்க்க

கயத்தாறில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புதன்கிழமை சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக சூறாவளிக் காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்தது . கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மாலையில் ... மேலும் பார்க்க

தேவாலய ஊழியருக்கு வெட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து ஆலய ஊழியரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை தொ்மல்நகா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தொ்மல்நகா் கேம்ப்-1 பகுதியில் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆ... மேலும் பார்க்க