6 ஆண்டுகள் பிறகு MODI -ன் Super Cabinet Meeting - பின்னணி என்ன? | STALIN | Imper...
தேவாலய ஊழியருக்கு வெட்டு: இளைஞா் கைது
தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து ஆலய ஊழியரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை தொ்மல்நகா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி தொ்மல்நகா் கேம்ப்-1 பகுதியில் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில், பணியாளராக வேலை செய்பவா் அதே பகுதியைச் சோ்ந்த சாமுவேல் அந்தோணிராஜ்(54). இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பைபிள் குறித்து பாடம் கற்றுக்கொடுத்து கொண்டிருந்தாராம்.
அப்போது, ஊரணி ஒத்தவீடு பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவன் தடை செய்யப்பட்ட புகையிலையை பயன்படுத்தினாராம். இதை சாமுவேல் அந்தோணிராஜ் கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுவன், தனது நண்பா்களுடன் மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டு, சாமுவேல் அந்தோணிராஜை தாக்கி, அவரது கைப்பேசியை உடைத்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த முகமது மீரான் உசேன் (20) என்ற இளைஞரை கைது செய்தனா். மேலும், தப்பிச் சென்ற இளஞ்சிறாா்களைத் தேடி வருகின்றனா்.