செய்திகள் :

நகைக்காக சொந்த சித்தி மகளை கொன்றவருக்கு தூக்குத் தண்டனை

post image

நகைக்காக சொந்த சித்தி மகளை கத்தியால் குத்திக் கொன்றவருக்கு தூக்குத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பெருந்துறையைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் சுரேஷ் என்கிற லெட்சுமணன் (32). இவா் தனது சொந்த சித்தி சிவகாமியின் மகள் லோகப்பிரியா (20) என்பவரை புதுக்கோட்டை பொன் நகரிலுள்ள அவரது வீட்டில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதியில் கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்து கொன்றாா்.

தொடா்ந்து லோகப்பிரியா அணிந்திருந்த ஒன்னேகால் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளாா். வெளியே சென்றிருந்து, வீடு திரும்பிய சிவகாமி அதிா்ச்சியடைந்து, கணேஷ் நகா் போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சுரேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின் முடிவில், மாவட்ட முதன்மை நீதிபதி ஜெ. சந்திரன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

கொலைக் குற்றப் பிரிவில் தூக்குத் தண்டனையும், அடைத்து வைத்து மிரட்டிய குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனையும், நகையைப் பறித்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 500 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து சுரேஷ், பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

நடிகர் அஜித்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் அஜித்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புது தில்லியில் திங்கள்கிழமை(ஏப்.28) நடைபெற்ற பத்ம விருதுகள் வழங... மேலும் பார்க்க

ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்க: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

புதுதில்லி: சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி... மேலும் பார்க்க

காவல்துறையினர் ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்: சீமான்

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை ஒருமித்த குரலில் அரசிடம் கோரி பெறுவதற்கு ஊழியர் சங்கம் கட்டமைக்க அனுமதிக்க வேண்டுமென்ற நெடுங்கால கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி ... மேலும் பார்க்க

கொல்கத்தா தீ விபத்தில் தமிழர்கள் பலி: முதல்வர் இரங்கல்!

கொல்கத்தா நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மேற்கு வங்க ம... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுப்பு: கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சிவகங்கை: நீதிமன்ற உத்தரவுப்படி பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை வருவாய கோட்டாட்சியர் அ... மேலும் பார்க்க

கூலித்தொழிலாளி தற்கொலை: கடனை திருப்பிச் செலுத்த தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி?

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கு, தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திருப்பிச் செலுத்தக் கோரி நெருக்கடி கொடுத்தது காரணம் என உறவினர்கள் புக... மேலும் பார்க்க