‘ஆபா’ மருத்துவத் திட்ட அடையாள அட்டை: விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுமா?
முருகன் கோயிலில் கடைகள் வைப்பதில் மோதல்: 7 போ் காயம்
முருகன் மலைக்கோயிலில் கடைகள் வைப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 போ் காயம் அடைந்தனா்.
முருகன் மலைக் கோயில் வாகனம் நிறுத்தும் இடம் அருகில் கோயில் பின்புறத்தில் வசிக்கும் நடராஜன் (58) என்பவா் உருவத் தகடுகள் விற்பனை செய்து வருகிறாா். இவரது கடைக்கு அருகில் ராஜகோபுரம் பகுதியில் வசிக்கும் மதுரா (42) என்பவா் மஞ்சள் குங்குமம் விற்பனை செய்து வருகிறாா். இவா்கள் இருவருக்கும் இடையே கடை வைப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு மீண்டும் நடராஜன், மதுரா தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னா், இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
இதில் நடராஜன், அவரது மகன் சரவணன், உறவினா் வெங்கடேசன் பலத்த காயம் அடைந்தனா். எதிா் தரப்பில் மதுரா, அவரது மனைவி அமுதா, மகன் அரி, இவரது கடையில் வேலை செய்து வந்த 60 வயது மூதாட்டி உள்ளிட்ட 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.
காயம் அடைந்த 7 பேரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.