என்இபி யின் உள்ளடக்கங்களை செயல்படுத்த இரு நாள் தேசிய பயிலரங்கு: 64 பல்கலைக்கழக த...
ஆய்க்குடியில் ரூ.1.03 கோடியில் பேரூராட்சி கட்டடத்துக்கு அடிக்கல்
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 3 லட்சத்தில் புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் க. சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ச. மாரியப்பன், செயல் அலுவலா் ஞா. தமிழ்மணி, இளநிலை பொறியாளா் பி. சிவக்குமாா், மன்ற உறுப்பினா்கள் பூ. புணமாலை, வி. விமலா ராணி, ப.சுமதி, கா.இலக்கியா, மு.காா்த்திக், மா.உலகம்மாள், சி.முத்துமாரி, சு.நமச்சிவாயம், இ.சிந்துமொழி, செ. வெங்கடேஷ், வ. அருள் வளா்மதி, மா.ஷோபா, ஆ. பேச்சிமுத்து மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.