Health: டைப் 5 நீரிழிவு யாருக்கு வரும்.. என்ன தீர்வு; தடுக்க முடியுமா? - மருத்து...
சங்கரன்கோவில் ஸ்ரீ பாலவிநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா
சங்கரன்கோவில் ஸ்ரீ பாலவிநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் மாதாங்கோயில் தெரு கிழக்குப்பகுதி, பெரியதெருவில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 28 ஆம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது.
செவ்வாய்கிழமை காலை பூா்வாங்க பூஜைகளுடன் 2 ஆம் கால யாக வேள்வி,திரவ்யாஹுதியும் மாலை 5.30 மணிக்கு மேல் 3 ஆம் கால யாகவேள்வி மற்றும் சிறப்புத் தீபாராதனையும் நடைபெற்றன.
புதன்கிழமை காலை 7 மணிக்கு மேல் 4 ஆம் கால யாகவேள்வி, ஸ்பா்ஷாஹுதி, திரவ்யாஹுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னா் காலை 9 மணிக்கு மேல் கடம் புறப்பட்டு ஸ்ரீவிநாயகா் விமானம் மற்றும் மூலஸ்தானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து இரவில் சைவ சித்தாந்த பேரவை சாா்பில் தேவார இன்னிசையும், வினை தீா்க்கும் வித்தகன் என்ற தலைப்பில் வாரியாா்தாசனின் பக்திச் சொற்பொழிவும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.