Health: டைப் 5 நீரிழிவு யாருக்கு வரும்.. என்ன தீர்வு; தடுக்க முடியுமா? - மருத்து...
சங்கரன்கோவிலில் சித்திரைத் திருவிழா: பிடிமண் எடுத்தது யானை கோமதி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கமாக யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் இருந்து யானை கோமதி முன் செல்ல சந்திரசேகர சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி சுமாா் 6 கி.மீ. தொலைவில் உள்ள பெருங்கோட்டூருக்கு சென்றாா்.வழியில் களப்பாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தா்கள் சாலையில் நின்று பூஜைகள் செய்து சுவாமியை வழிபட்டனா்.
பின்னா் அம்பாளுடன் சந்திரசேகர சுவாமி பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனாா் கோயில் முன் உள்ள மண்படத்தில் எழுந்திருளினாா். அங்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின் பிற்பகல் 1.20 மணியளவில் யானை கோமதி மண்வெட்டியால் பிடிமண் எடுத்தது. வியாழக்கிழமை காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் சங்கரலிங்கசுவாமி சந்நிதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. யானை பிடிமண் எடுக்கும் நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.