சசிகுமார், நானிக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா!
நடிகர் சூர்யா ரெட்ரோவுடன் வெளியாகும் மற்ற திரைப்படங்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ, நானியின் ஹிட் - 3, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, ரெய்டு - 2 ஆகிய திரைப்படங்கள் நாளை (மே. 1) திரையரங்குகளில் வெளியாகின்றன.
இதில், ரெட்ரோ திரைப்படம் 3000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
நானியின் ஹிட் - 3 படத்திற்கும் தெலுங்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நடிகர்கள் சசிகுமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல பாராட்டுகளைப் பெற்றதால் படம் குறித்த ஆவல் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
Dearest Sasi & Simran, Nani, Ajay sir & Riteish, all the cast & crew of #TouristFamily#HIT3#Raid2 Wishing you the bestest!#Anbannafans Lots of love and respect for your support for #Retro... May each of our films be a success & entertain the audience in theatres tomorrow.
— Suriya Sivakumar (@Suriya_offl) April 30, 2025
இந்த நிலையில், நடிகர் சூர்யா நாளை வெளியாகும் அனைத்து படங்களுக்கும் அதில் நடித்தவர்களுக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் அப்படங்கள் ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக அமைந்து வெற்றி பெற வேண்டும் என்கிற தன் விருப்பத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: 30 நாளில் படப்பிடிப்பை முடிந்த பிரம்மயுகம் இயக்குநர்!