இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு நற்செய்தி..! மும்பையில் அலுவலகத்தை திறந்த பிரீமியா் லீக்!
மும்பையில் பிரீமியர் லீக் அலுவலம் திறப்பினால் இந்திய கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
பிரீமியர் லீக் தொடர் இங்கிலாந்தில் உள்ள முக்கியமான, பிரலமான ஒரு கால்பந்தாட்ட தொடராக இருக்கிறது. இந்தத் தொடருக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
இந்தாண்டு லிவா்பூல் அணி பிரீமியர் லீக் தொடரரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முகமது சாலாவுக்கு இந்தியாவிலும் தமிழகத்திலும் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கால்பந்தினை ஊக்குவிக்கவும் உள்ளூர் ரசிகர்களை ஆர்வமூட்டவும் மும்பையில் இந்த அலுவலகத்தை தொடங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டீஷ் கவுன்சில் 2007ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அடிமட்ட நிலையில் கால்பந்தினை ஊக்குவித்து வருகிறது.
சீனியர் அளவில் பிரீமியர் லீக் 2014 முதல் ஐஎஸ்எல் (இந்தியன் சூப்பர் லீக்) போட்டிகளில் நிர்வாகம், இளைஞர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்களின் மேம்பாடு என பல்வேறு அளவில் உதவிகரமாக வேலை செய்து வருகிறது.
பிரீமியர் லீக்கின் தலைமை மேலாண்மை அதிகாரி ரிச்சர்ட் மாஸ்டர் கூறியதாவது:
இந்தியாவில் எங்களுக்கென அறிவுப்பூர்வமான ரசிகர்களைக் கொண்டுள்ளன. புகழினால் கால்பந்து தொடர்ந்து வளருமென்பது எங்களுக்குத் தெரியும்.
இந்தியாவில் தொடர்ச்சியாக எங்களது ஈடுபாட்டை அளிப்பதில் பெருமையாக இருக்கிறோம். 18 வயதினருக்கான போட்டிகள், சமீபத்திய ஐஎஸ்எல் தொடரில் பங்களிப்பு என சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் எனக் கூறியுள்ளார்.
— / #LIVTOT | @LFCpic.twitter.com/tXippOxuys
— Premier League India (@PLforIndia) April 27, 2025