முழுக்க முழுக்க ஏஐ! கவனம் ஈர்க்கும் கன்னட திரைப்படம்!
முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தால் உருவான கன்னட திரைப்படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் வந்தபின் எல்லாத் துறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. கூட்டுழைப்பு அதிகம் தேவைப்படுகிற டிஜிட்டல் துறைகளில் மாற்று ஏற்பாடுகளுக்காக ஏஐ அதன் வேலைகளைத் துவங்கியுள்ளது.
அப்படி, அங்கே இங்கே என ‘சோதனை ஓட்டம்’ பார்த்த ஏஐ தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி நரசிம்ம மூர்த்தி என்பவர் கன்னட மொழியில் ‘லவ் யூ’ என்கிற 95 நிமிட திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
ரூ. 10 லட்சத்தில் உருவான இப்படத்தில் மனிதர்கள் யாரும் நடிக்கவில்லை. முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து நாயகன், நாயகி, அவர்களுக்கு இடையேயான காதல் காட்சிகள், பாடல்கள் என எல்லாவற்றையும் உருவாக்கியுள்ளனர்.
நுதன் என்பவர் ஏஐ பணிகளைக் கவனிக்க நரசிம்ம மூர்த்தி உருவாக்க மேற்பார்வையாளராக படத்தை தயாரித்துள்ளார்.
ஒரு திரைப்படம் உருவாக எவ்வளவோ நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என ஊரே ஓரிடத்தில் கூடுவதுபோல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு திரைப்படங்கள் உருவாகும் காலத்தில் ஒரே அறையில் அமர்ந்து நினைத்த கதையை ஏஐ-ல் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் இருவர். இது புரட்சியா இல்லை அபாயமா? வெளியானால் தெரியும்!
இதையும் படிக்க: டிக்கெட் முன்பதிவில் அசத்தும் ரெட்ரோ!