செய்திகள் :

அழகர் கோவிலில் பிக் பாஸ் பவித்ரா ஜனனி! ரசிகர்கள் பகிர்ந்த விடியோ!

post image

மதுரை அழகர் கோவிலில் பிக் பாஸ் புகழ் பவித்ரா ஜனனி சாமி தரிசனம் செய்தார்.

மேலும், அங்கிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை ரசிகர் ஒருவர் விடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று டாப் 5 போட்டியாளர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் பவித்ரா ஜனனி. மென்மையான மனதுடையவர்கள் பிக் பாஸ் போட்டியில் நீடிக்க முடியாது என்ற விதியை மாற்றிக் காட்டியதால், இவருக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமின்றி இவர் நடித்த ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னைத் தொடும் போன்ற தொடர்கள் மூலமும் தனக்கென தனி ரசிகர்களைச் சேர்த்துள்ளார்.

இதுவரையிலும் 14க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ள பவித்ரா, 2013ஆம் ஆண்டின் தமிழில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் காந்தாரியாக நடித்து, சின்ன திரையில் அறிமுகமானார். அறிமுகமான தொடரிலேயே பவித்ராவின் நடிப்பு பலரின் பாராட்டைப் பெற்றது.

பவித்ரா லட்சுமி

இதனைத் தொடர்ந்து ஆபிஸ், சரவணன் மீனாட்சி, லட்சுமி வந்தாச்சு, பகல் நிலவு, ராஜா ராணி, மெல்லத் திறந்தது கதவு, ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னைத் தொடும் என பல்வேறு தொடர்களில் நடித்தார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு வாய்ந்த போட்டியாளராகவும் விளங்கினார். இதனால், பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார்.

அழகர் கோவிலில் பவித்ரா ஜனனி

ஆன்மிகத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்ட பவித்ரா, அடிக்கடி கோவில்களுக்குச் செல்வது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் மதுரையில் உள்ள அழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

மேலும், கோயிலில் சூழ்ந்த ரசிகர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான விடியோ இணையத்தில் அவரின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | பணத்தில் கிடைக்காத மகிழ்ச்சி... சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி பகிர்ந்த விடியோ!

அனிருத் குரலில் ‘கிஸ்’ படத்தின் முதல் பாடல்!

நடிகர் கவின்-ன் புதிய திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.சின்னத் திரை மூலம் பிரபலமாகி வெள்ளித் திரையில் கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் கவின். பிக்பாஸ் மூலம் மற்றொரு பரிமாணத்தை அடைந்த அவர் அதன் ப... மேலும் பார்க்க

உண்மையான ஆட்டநாயகன் இவர்தான்..! பெருந்தன்மையாக நடந்துகொண்ட பிஎஸ்ஜி வீரர்!

சாம்பியன்ஸ் லீக் முதல்கட்ட அரையிறுதியில் வென்ற பிஎஸ்ஜி அணியின் ஆட்ட நாயகன் தானில்லை கோல் கீப்பர்தான் என விடின்ஹா கூறியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் லீக்கின் ஆர்செனல் அணி... மேலும் பார்க்க

எஸ்டிஆர் 49! மீண்டும் சிம்பு - சந்தானம் கூட்டணி!

நடிகர் சிலம்பரசனின் 49 ஆவது படத்தில் காமெடியனாக நடிகர் சந்தானம் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.இதுகுறித்து, படக்குழுவின் எக்ஸ் பக்கத்தில், நீண்ட காலமாகக் காத்துக் கொண்டிருந்த கூட்டணி, மீண்டும... மேலும் பார்க்க

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே வெளியீட்டு தேதி எப்போது?

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.மார்வெல் திரைப்பட நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ்: என்ட்கேம் படத்துக்குப் பிறகு வெளியான அந்நிறுவனத்தின் படங்கள் எவையும் அவ்வளவாக ஹிட் ... மேலும் பார்க்க

பிரபல ராப் பாடகர் பாட்ஷா மீது வழக்கு!

பிரபல ராப் பாடகரான பாட்ஷாவின் மீது பஞ்சாப் மாநில காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பாலிவுட் திரையுலகில் தனது ராப் பாடல்கள் மூலம் ரசிகர்களைப் பெற்றவர் பாடகர் பாட்ஷா (எ) ஆதித்யா பிரதீக் சிங் (... மேலும் பார்க்க

ரூ.100 கோடி வசூலித்த துடரும்!

நடிகர் மோகன்லாலின் துடரும் திரைப்படம் ரூ. 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது. மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான எம்புரான்திரைப்படம் ரூ. 250 கோடி... மேலும் பார்க்க