உழைப்பாளர் நாள்: தமிழகம் முழுவதும் நாளை மதுக்கடைகள் அடைப்பு!
உழைப்பாளர் நாளையொட்டி தமிழகம் முழுவதும் நாளை(மே 1) மதுக்கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் விற்பனை மதுபானக் கடைகள் அதனோடு இணைந்த மதுபானக் கூடங்கள், தனியார் மதுபானக் கூடங்கள், நட்சத்திர விடுதியில் உள்ள மதுபானக் கூடங்கள் உள்ளிட்டவைகள் வியாழக்கிழமை(மே 1) மூடப்பட்டிருக்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த உத்தரவை மீறி மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அன்றைய நாளில், மதுபானக் கூடங்களில் மது விற்பனை நடைபெறுவது தெரியவந்தால், மதுபானக் கூடங்களுக்கான உரிமம் ரத்து செய்தல் அல்லது நிறுத்தி வைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி