செய்திகள் :

பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

post image

நாட்டின் பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் 10 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கெச், ஜியாரத் மாகாணத்தில் தீவிரவாதிகள் இருப்பது குறித்து உளவுத்துறைக்குத் தகவல் வந்தது. இதனிடையே இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் படி, மாவட்டங்களில் தனித்தனி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 10 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டன, அவர்கள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான ஏராளமான தாக்குதல்களிலும் பொதுமக்களைக் கொன்றதிலும் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

ஜியாரத் துணை ஆணையர் ஜகாவுல்லா துரானி இறப்புகளை உறுதிப்படுத்தினார், மேலும் ஏழு உடல்கள் பாதுகாப்புப் பணியாளர்களால் ஜியாரத் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் கூறினார்.

ராஜஸ்தான்: 3 நாள்களில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலி!

ராஜஸ்தானில் 3 நாள்களில் கள்ளச்சாரயம் குடித்த 8 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அல்வார் மாவட்டத்திலுள்ள பையிண்ட்பூர் மற்றும் கிஷான்பூர் ஆகிய கிராமங்களில் பல காலமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்... மேலும் பார்க்க

அமேதியில் ராகுல்: ஆயுத தொழிற்சாலையை ஆய்வு செய்தார்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக அமேதிக்கு வருகை தந்து முன்ஷிகஞ்சில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையை ஆய்வு செய்தார். ரேபரேலி, அமேதி தொகுதியில் இரண்டு ந... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

முன்னாள் பயங்கரவாதிகளை மணந்த 60 பெண்கள் நாடுகடத்தல்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் பயங்கரவாதிகளை மணந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 60 பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று, சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் துப்ப... மேலும் பார்க்க

தெலங்கானா தொழிற்சாலையில் வெடி விபத்து: 3 பேர் பலி

தெலங்கானாவின் கேட்டிபள்ளி கிராமத்தில் உள்ள பிரீமியர் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் பலியாகினர், 6 பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் சந்தீப், நரேஷ் மற்றும் தேவி சரண் எ... மேலும் பார்க்க

புகார் அளிக்க காவல்நிலையம் வருவோர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வரும் ஒவ்வொருவரும் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்திய அரசியலமைப்... மேலும் பார்க்க