தாய்லாந்திலிருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்; இந்திய ஹாக்கி அணி முன்னாள் வீரர் ...
மே 4ஆம் தேதி நீட் தேர்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான 2025ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மே 4ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் நடைபெறவிருக்கிறது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்திலிருந்து நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.