செய்திகள் :

முன்னாள் பயங்கரவாதிகளை மணந்த 60 பெண்கள் நாடுகடத்தல்!

post image

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் பயங்கரவாதிகளை மணந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 60 பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று, சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அட்டாரி - வாகா எல்லையை மூடப்பட்டு பாகிஸ்தானுக்கு எதிரான பல அதிரடி முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டிலுள்ள இந்தியர்கள் அனைவரும் விரைவில் தங்களது தாயகம் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் செயல்பட்ட முன்னாள் பயங்கரவாதிகளை மணந்து இந்தியாவில் வாழ்ந்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 60 பெண்கள் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அப்பெண்கள் அனைவரும் அம்மாநிலத்தின் ஸ்ரீநகர், பாராமுல்லா, குப்வரா, புத்கம் மற்றும் ஷோபியான் ஆகிய மாவட்டங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டு பாதுகாப்புப் படையினரால் பேருந்தில் பஞ்சாப் அழைத்து வரப்பட்டனர்.

பின்னர், அட்டாரி - வாகா எல்லையின் வழியாக பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 2010-ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதிகளுக்கான மறுவாழ்வுத் திட்டத்தின் மூலம் இந்தியாவில் குடியேறியதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் உரிய அனுமதியுடைய விசா மூலம் இந்தியாவில் குடியேறி தற்போது சட்டவிரோதமாக வசித்த 11 பாகிஸ்தானியர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலினால் இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்களையும் வெளியேற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தெலங்கானா தொழிற்சாலையில் வெடி விபத்து: 3 பேர் பலி

காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு விடுதி உரி... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி: கார்கே

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி அளிக்குமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது, ``சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம். இதன் மூலமாகத... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை பாஜக ஏற்றுள்ளது - ராகுல்

சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பாஜக ஏற்றுள்ளதாக அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ... மேலும் பார்க்க

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பல்வேறு விவகாரங்களில் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவை, நடுவர்மன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் சட்டப்பிரிவு 1996-ன் கீழ், நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று முக்கியத்துவம் வாய்ந்த தீ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவாவிலுள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸாம் வர்ஸாக் சோதனைச் சாவடி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.உத்தரப் பிரதேசம் ரேபரேலி மற்றும் அமேதி மக்களவை தொகுதிக... மேலும் பார்க்க