ஒசாகா திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக அஜித், லியோ படத்துக்கு 6 விருதுகள்!
சிஎஸ்கே போட்டிக்கு முன்பாக திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த ஆர்சிபி வீரர்கள்!
ஆர்சிபி வீரர்கள் திருப்பதி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றனர்.
இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி ரஜத் படிதார் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 7இல் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
சிஎஸ்கே உடன் மே.3ஆம் தேதி தங்களது சொந்தத் திடலில் மோதவிருக்கிறது.
இந்நிலையில், ஆர்சிபி வீரர்கள் ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா திருப்பதி திருமலை கோவிலுக்குச் சென்று தரிசத்துள்ளார்கள்.
ஆர்சிபி வீரர்களுடன் ஆர்சிபி வீராங்கனை ஷ்ரேயங்கா பாடீலும் சென்றுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
சொந்த திடலில் அதிகமாக தோல்வியைச் சந்தித்துள்ள ஆர்சிபி அணி ஃபார்மில் இல்லாத சிஎஸ்கே அணியை எளிதாக வென்றுவிடுமென ரசிகர்கள் கணித்து வருகிறார்கள்.
VIDEO | Andhra Pradesh: Royal Challengers Bengaluru (RCB) players Rajat Patidar, Jitesh Sharma and Shreyanka Patil offered prayers at the Tirumala temple earlier today.
— Press Trust of India (@PTI_News) April 30, 2025
(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/VKWTv8ghJP