செய்திகள் :

பஹல்காம்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் குழு ஆலோசனை!

post image

பஹல்காம் தாக்குதலையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று(புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்ட சூழல் நிலவி வரும் நிலையில் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. நேற்று(செவ்வாய்க்கிழமை) மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, முன்னதாக பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் முதல் கூட்டம் கடந்த ஏப். 23 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியா வரத் தடை, சிந்து நதிநீா் பகிா்வு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க |'உங்க அன்ப புரிஞ்சுக்குறேன்.. ஆனால்..!' - தவெக தலைவர் விஜய் பதிவு!

பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

நாட்டின் பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் 10 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கெச், ஜியாரத் மாகாணத்தில் தீவிரவாதிகள் இருப்பத... மேலும் பார்க்க

பஹல்காம் எதிரொலி: தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுத் தலைவர் அலோக் ஜோஷி!

பஹல்காம் தாக்குதலையைடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையைடுத்து பிரதமர் நரேந்த... மேலும் பார்க்க

பஹல்காம்: காங்கிரஸின் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கோரிக்கைக்கு பவார் ஆதரவு!

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்கச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆதரித்துள்ளார். தாணேவில் நிகழ்ந்த கோயில்... மேலும் பார்க்க

57 முறை பணியிடமாற்றம்: ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா இன்றுடன் ஓய்வு!

34 ஆண்டுகள் பணிக் காலத்தில் 57 முறை பணியிட மாறுதலுக்கு உள்ளான ஹரியாணா மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.பல்வேறு தடைகளுக்கு மத்தியில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கைவிடாத 1991ஆம்... மேலும் பார்க்க

ஆந்திர கோயில் சுவர் இடிந்து பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: பிரதமர் மோடி!

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆந்திரத்தின் ... மேலும் பார்க்க

இந்தியா, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்களுடன் அமெரிக்கா சமரச பேச்சு!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி ... மேலும் பார்க்க