ரூ. 18 கோடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா?
நடிகை நயன்தாரா தெலுங்கு படமொன்றில் நடிக்க தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆண்டிற்கு 3 படங்களிலாவது நடித்துவிடுகிறார். அதில், உச்ச நட்சத்திர நடிகர்கள் படங்களும் அடக்கம்.
தமிழைத் தாண்டி இந்தியளவிலும் பெரிய படங்களில் நாயகியாக நடிக்க நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, இவர் நடித்துமுடித்த டியர் ஸ்டூடன்ஸ், மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகியுள்ளன.
இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ள தெலுங்கு படமொன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவை அணுகியதாகவும் நடிக்க ஒப்புக்கொண்ட நயன் சம்பளமாக ரூ. 18 கோடி கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் சம்பளத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.
நட்சத்திர நடிகர்களுடன் நடிக்க நயன்தாரா ரூ. 10 கோடி வரை சம்பளம் பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சூப்பர் ஸ்டாரா? அஜித் அளித்த பதில்!