30 நாளில் படப்பிடிப்பை முடிந்த பிரம்மயுகம் இயக்குநர்!
நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார்.
தொடர்ந்து, வர்ஷங்களுக்கு ஷேஷம் திரைப்படத்தில் நாயகனாக நடித்து அதிலும் வெற்றிபெற்றார். அதேநேரம், குறைவான படங்களிலேயே நடிக்கும் பிரணவ், உலகம் முழுவதும் சுற்றும் பயணியாகவும் இருக்கிறார்.
எப்போதும் வெளிநாட்டு பயணங்களிலேயே இருப்பதும் அங்கு இசைக்கருவிகளை வாசித்து எளிமையான வாழ்க்கையை வாழ்வதையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார். பெரும்பாலும் கேரளத்தில் இருக்க மாட்டார்.
இந்த நிலையில், பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்க ஒப்பந்தமானார்.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் ஹாரர் பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 25 ஆம் தேதி துவங்கி நிலையில், சரியாக ஒரு மாதத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.