செய்திகள் :

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட நிஞ்சா 500 பைக் அறிமுகம்!

post image

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட நிஞ்சா 500 பைக்கை கவாஸகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் நிஞ்சா 500 பைக்கின் அடுத்த வெர்சனாக மேம்படுத்தப்பட்ட வசதிகள், வடிவமைப்புகளுடன் அறிமுகமாகியுள்ள 2025 நிஞ்சா 500 பைக்கின் விலை ரூ. 5.29 லட்சம் ஆகும்.

கடந்த மாடலைவிட ரூ. 5,000 மட்டுமே விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பைக்கின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இதில் 451 சி.சி. பேரரல் இரட்டை இன்ஜின் கொண்டதாகவும், 44.77 குதிரைத்திறன்(பி.எச்.பி.) கொண்டதாகவும், 6 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரட்டை எல்இடி முகப்பு விளக்குகள், முன்புறம் 310 எம்எம் டிஸ்க், பின்புறம் 220 எம்எம் டிஸ்க் பிரேக்குகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கின் எடை 171 கிலோ ஆகும்.

இந்தியாவில் மெடாலிக் கார்பன் கிரே நிறத்தில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும், பைக்கின் முன்புறம் உள்ள டிஸ்பிளேவுடன் ஸ்மார்ட்போன்களை இணைக்கும் வசதியும் உள்ளது.

இதையும் படிக்க : நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது கவாஸகி!

எல்லையில் நீடிக்கும் பதற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

மும்பை: புவிசார் அரசியல் பதற்றம் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், இரண்டு நாள் பேரணிக்குப் பிறகு, இன்றைய நிலையற்ற அமர்வில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தன.எவ்வாறாயினும், தொ... மேலும் பார்க்க

புதிய அம்சங்களுடன் ஜாவா 42 எஃப்ஜே!

சமீபத்தில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் எக்ஸாஸ்ட் மேம்படுத்தப்பட்டுள்ளன.அதாவது பைக்கில் இருந்த இரு எக்ஸாஸ்ட்களில் ஒன்று நீக்கம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.ஜாவா யெஸ்டி நிறுவன... மேலும் பார்க்க

எத்தனால் கலந்த பெட்ரோலுடன் இயங்கும் எம்.ஜி. ஹெக்டார்..!

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ஹெக்டார் காரை அறிமுகம் செய்துள்ளது. தோற்றத்தில் பழைய வடிவம் என்றாலும், மேம்படுத்தப்பட்ட புதிய மாடலில் இரண்டு என்ஜின் தேர்வுகளுடன் வெளியிட்டுள்ளத... மேலும் பார்க்க

ஹைஃபையான சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக்!

சாம்சங் நிறுவனம், அதன் மிகப் பிரீமியமன ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. சாம்சங் காலக்ஸி வாட்ச் 6 கிளாசிக்தான் அது.மிக அழகிய நவீனத்துவ வடிவமைப்புடனும், புதிய தொழில்நுட்பங்களுடனும், உடல் ஆரோ... மேலும் பார்க்க

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4-வது காலாண்டு வருவாய் உயர்வு!

மும்பை: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 4-வது காலாண்டு மற்றும் ஆண்டு முழுவதுக்குமான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.இன்றைய வர்த்தகத்தில் ப்ளூ-சிப் பங்கான ரிலையன்ஸ்... மேலும் பார்க்க

ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 770 கி.மீ. பயணம்.. மெர்ஸிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ!

ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 770 கி.மீ. பயணம் மேற்கொள்ளும் வகையில் மெர்ஸிடிஸின் புதிய செடான் இவி காரை அறிமுகம் செய்யவிருக்கிறது மெர்ஸிடிஸ் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம். ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மெர... மேலும் பார்க்க