எத்தனால் கலந்த பெட்ரோலுடன் இயங்கும் எம்.ஜி. ஹெக்டார்..!
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ஹெக்டார் காரை அறிமுகம் செய்துள்ளது.
தோற்றத்தில் பழைய வடிவம் என்றாலும், மேம்படுத்தப்பட்ட புதிய மாடலில் இரண்டு என்ஜின் தேர்வுகளுடன் வெளியிட்டுள்ளது. குறிப்பாக 20 சதவிகித எத்தனால் கலந்த பெட்ரோலை உபயோகிக்கும் வகையில் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1, 2025-க்குப் பிறகு தயாரிக்கப்படும் வாகனங்களில் இந்த அமைப்பைக் கொண்டு வந்துள்ளது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினும் உள்ளன. இதில் 6 வேரியண்ட்களுடன், லெவல் 2 அடாஸ், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகளுடன் உள்ளன.
எம்ஜி ஹெக்டார் (பெட்ரோல்) ஷோரூம் விலை ரூ.13.99,800 முதல் ரூ.22,13,800 வரையும், எம்ஜி ஹெக்டார் டீசல் விலை ரூ. 18,57,800 முதல் ரூ,22,56,800 வரை உள்ளது.
ஹெக்டரின் நீடித்த புகழ் அதன் சிறந்த தரம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேலும் ஊக்கப்படுத்துவதாகவும் எம்ஜி மோட்டாரின் இந்திய விற்பனைத் தலைவர் ராகேஷ் சென் கூறினார்.