செய்திகள் :

குக் வித் கோமாளி - 6 ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

post image

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு மன அழுத்தம் நீங்குவதாக ரசிகர்களால் கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 6-வது சீசன் மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

கடந்த சீசனில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்றிருந்த இருந்த நிலையில், இந்த சீசனில் புதிதாக சமையல் கலைஞர் கெளசிக்கும் பங்கேற்கவுள்ளார்.

தொடர்ந்து ஆறாவது சீசனாக ரக்‌ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

கடந்த சீசன்களில் கோமாளிகளாக(சமையல் தெரியாதவர்) பங்கேற்ற புகழ், ராமர், சரத், சுனிதா, குரேஷி இவர்களுடன் புதிய கோமாளிகளாக நடிகை செளந்தர்யா, பாடகர் பூவையார், யூடியூப் பிரபலம் சர்ஜின், நடன கலைஞர் டோலி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: வீட்டில் குடும்பப் பெண், வெளியே புரட்சிப் பெண்: தேஜஸ்வினியின் புதிய தொடர் அயலி!

அழகர் கோவிலில் பிக் பாஸ் பவித்ரா ஜனனி! ரசிகர்கள் பகிர்ந்த விடியோ!

மதுரை அழகர் கோவிலில் பிக் பாஸ் புகழ் பவித்ரா ஜனனி சாமி தரிசனம் செய்தார். மேலும், அங்கிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை ரசிகர் ஒருவர் விடியோ எடுத்துப் பகிர்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் பிஎஸ்ஜி முன்னிலை, ஆர்செனல் தடுமாற்றம்!

சாம்பியன்ஸ் லீக்கின் முதல் கட்ட அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி முன்னிலை வகிக்கிறது.ஆர்செனல் அணியுடனான முதல் கட்ட அரையிறுதியில் பாரிஸ் ஜெயண்ட் ஜெர்மெயின் (பிஎஸ்ஜி) 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தப் போட... மேலும் பார்க்க

பணத்தில் கிடைக்காத மகிழ்ச்சி... சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி பகிர்ந்த விடியோ!

உண்மையான மகிழ்ச்சி எதில் கிடைக்கும் என்பது குறித்து சிறகடிக்க ஆசை தொடரின் நாயகி கோமதி பிரியா விடியோ வெளியிட்டுத் தெரிவித்துள்ளார். இதில், கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி, பயணம் செய்யும்போ... மேலும் பார்க்க

30 நாளில் படப்பிடிப்பை முடிந்த பிரம்மயுகம் இயக்குநர்!

நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார்.தொ... மேலும் பார்க்க

முழுக்க முழுக்க ஏஐ! கவனம் ஈர்க்கும் கன்னட திரைப்படம்!

முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தால் உருவான கன்னட திரைப்படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் வந்தபின் எல்லாத் துறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. கூட்டுழைப்பு அதிகம் தே... மேலும் பார்க்க

டிக்கெட் முன்பதிவில் அசத்தும் ரெட்ரோ!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்துக்கான டிக்கெட்கள் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரெட்ரோ திரைப்படத்த... மேலும் பார்க்க