செய்திகள் :

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!

post image

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான புதன்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.

ஸ்ரீ சுப்பிரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு மடத்தின் தற்போதைய 70 ஆவது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்க தீர்த்த திருக்குளத்தில் சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

கோயில் திருக்குளத்தில் ஆதீனங்கள்,சந்நியாசிகள் ஆகியோருக்கு மிதக்கும் தெப்பலில் அமர்ந்து நிகழ்வை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசித்தனர். ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளையமடாதிபதிக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற நாமம் சூட்டப்பட்டது.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்,துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி , டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் மடாதிபதிகள் இருவரும் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து சங்கர மடத்திற்கு மங்கல மேல வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அங்கு இளையமடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71 ஆவது பிடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

விழாவையொட்டி காமாட்சி அம்மன் கோயில் வளாகமும் சங்கர மடமும் வண்ண மின்விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் மற்றும் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விசுவநாத சாஸ்திரி ஆகியோர் தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக நினைவு நாள்: உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்ட நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்புச் சத்தியாகிரக நினைவு தூண் அருகே புதன்கிழமை காலை உப்பு அள்ளி, மறைந்த த... மேலும் பார்க்க

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியீடு!

நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்... மேலும் பார்க்க

கொல்கத்தா நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து: கரூர் தொழிலதிபரின் மாமனார், 2 குழந்தைகள் பலி

கரூர்: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மாமனார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் ... மேலும் பார்க்க

குடிநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு நீதிமன்றக் காவல்!

மதுரை கே.கே.நகரில் மழலையர் பள்ளியின் குடிநீர் தொட்டியில் 3 வயது சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர், உதவியாளர் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை கே.கே.... மேலும் பார்க்க

வினா-விடை வங்கி... சந்திப்பிழை

சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக1. அ) மருத்துவப் படிப்பிற்கு என்னை தேர்வு செய்தனர்.ஆ) மருத்துவ படிப்பிற்கு என்னை தேர்வு செய்தனர்.இ) மருத்துவப் படிப்பிற்கு என்னைத் தேர்வு செய்தனர்.ஈ) மருத்துவ படி... மேலும் பார்க்க

திருப்பதி அருகே லாரி - கார் மோதியதில் 5 பேர் பலி! ஒசூரைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்!!

திருப்பதி மாவட்டம் பக்கலா நகரம் தோட்டப்பள்ளி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இன்று(திங்கள்கிழமை) பிற்பகல் நடைபெற்ற இந்த விபத்தில் 5 பேர் ... மேலும் பார்க்க