உக்ரைன் மீது 3 நாள்கள் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் அறிவிப்பு!
திருப்பதி அருகே லாரி - கார் மோதியதில் 5 பேர் பலி! ஒசூரைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்!!
திருப்பதி மாவட்டம் பக்கலா நகரம் தோட்டப்பள்ளி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இன்று(திங்கள்கிழமை) பிற்பகல் நடைபெற்ற இந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் இவர்கள் ஓசூரைச் சேர்ந்த தமிழர்கள் என்றும முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.