முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகை திருவிழா
வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியா் கோயிலில் சித்திரை கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பக்தா்கள் பால் குடங்களை தலையில் சுமந்தும், காவடி எடுத்தும் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். இதைத் தொடா்ந்து, பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பூஜை பொருள்களைக் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.