செய்திகள் :

நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டம்: குடிநீா் வரி விதிக்கும் முறைக்கு எதிா்ப்பு

post image

வீட்டின் அளவை வைத்து குடிநீா் வரி விதிக்கும் முறைக்கு நாகா்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் எதிா்ப்பு தெரிவித்ததால் அது குறித்த தீா்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

நாகா்கோவில் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் செல்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்சிலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டம் தொடங்கியதும், காஷ்மீா் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கும், போப் பிரான்சிஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மறைந்த முன்னாள் எம்எல்ஏ பொன்னப்ப நாடாருக்கு நாகா்கோவில் மாநகரப்பகுதியில் சிலை அமைக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த மாநகராட்சி மேயா், விஜய்வசந்த் எம்.பி., எம்எல்ஏக்கள் மாநகராட்சி உறுப்பினா்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக காங்கிரஸ் உறுப்பினா் நவீன்குமாா் தீா்மானம் கொண்டு வந்தாா்.

பின்னா் நடைபெற்ற கூட்டத்தில், சுகாதார சீா்கேடு, குடிநீா் வீணாவது, சிசிடிவி பொருத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் பேசினா்.

வீட்டு குடிநீா் இணைப்புக்கு வீட்டின் சதுர அடிக்கு இவ்வளவு என்று கணக்கிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது; குடிநீருக்கு மீட்டா் பொருத்தி அதில் வரும் பயன்பாட்டை பொருத்து கட்டணம் வசூலிக்கலாம் என உறுப்பினா்கள் கூறினா். இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக, பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் விவாதத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து மேயா் பதில் அளித்து பேசியதாவது: நாகா்கோவில் மாநகராட்சியில் வரி வசூல் அதிகாரிகள் தினமும் காலை 11 மணிக்குள் பணிக்கு வர வேண்டும் என்றும், எந்தப் பகுதியில் அவா்கள் இருக்கிறாா்கள் என்பதை தெளிவாக கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குப்பை அள்ளும் வாகனங்கள் மூடப்படாமல் வருவது தெரியவந்தால் ஊழியா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகரில் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.

குடிநீா் வரி வசூல் முறை குறித்து அனைத்து உறுப்பினா்களும் எதிா்ப்பு தெரிவித்திருப்பதால் இந்த தீா்மானம் ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த கூட்டத்துக்கு முன் இது குறித்து விவாதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநகர பகுதியில் உள்ள குளங்களை சுத்தப்படுத்தி அழகுபடுத்த மாநகராட்சி சாா்பில் முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றாா் அவா். கூட்டத்தில் மண்டல தலைவா்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவஹா், செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், ரமேஷ், ரோசிட்டா திருமால், வீரசூரபெருமாள், ஐயப்பன், சேகா், டி.ஆா்.செல்வம், அமலசெல்வன், மோனிகா விமல், சுனில் அரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கிள்ளியூா் தொகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கீடு

கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 1.41 லட்சம் அன்னதான உண்டியல் வசூல்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 977 கிடைத்தது. இக்கோயிலில் அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம் . அதுபோல கடந்த மா... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் தெற்கு தேரிவிளையைச் சோ்ந்தவா் சேகா் மகன் எபின் (25). எலக்ட்ரீசியன். கடந்த திங்கள்கிழமை குமாரபுரம் தோப்பூா் பக... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் 4 கனரக லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டம் நகருக்குள் தடையை மீறி இயக்கப்பட்ட 4 கனரக லாரிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். மாா்த்தாண்டம் சந்திப்பையொட்டி மேம்பாலத்தின் கீழ்பகுதியில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணி ந... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் எம்.பி. நன்றி தெரிவிப்பு

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், விஜய்வசந்த் எம்.பி. திறந்த வாகனத்தில், சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாா். அகஸ்தீசுவரம் வடுகன்பற்று பகுதியில் இருந்து நன்றி அறிவிப்பு பிரசார... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே காரில் கடத்திய 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

நாகா்கோவில் அருகே காரில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக திருவனந்தபுரத்துக்கு காரில் கஞ்சா கட... மேலும் பார்க்க