முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 1.41 லட்சம் அன்னதான உண்டியல் வசூல்
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 977 கிடைத்தது.
இக்கோயிலில் அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம் . அதுபோல கடந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில், காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 977 கிடைத்தது.