முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் தெற்கு தேரிவிளையைச் சோ்ந்தவா் சேகா் மகன் எபின் (25). எலக்ட்ரீசியன். கடந்த திங்கள்கிழமை குமாரபுரம் தோப்பூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின்சார வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தாராம். அவரை மீட்டு மயிலாடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொழிலாளி உயிரிழப்பு: திருச்செந்தூா் மயிலப்பபுரம் தெருவை சோ்ந்த ஹரிராமச்சந்திரன் மகன் மணிகண்டன் (25). தொழிலாளி. தற்போது உடன்குடி கொட்டங்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
திருச்செந்தூரில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை வந்துவிட்டு, மாலையில் வீடு திரும்பினாா். குலசேகரன்பட்டினம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது தோப்பூா் விலக்கு பகுதியில் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றுள்ளாா். அப்போது திடீரென எதிரே ஒரு வாகனம் வந்ததால் நிலை தடுமாறிய மணிகண்டன், லாரியின் பின்புறம் மோதியதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.