முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
கன்னியாகுமரியில் எம்.பி. நன்றி தெரிவிப்பு
கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், விஜய்வசந்த் எம்.பி. திறந்த வாகனத்தில், சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
அகஸ்தீசுவரம் வடுகன்பற்று பகுதியில் இருந்து நன்றி அறிவிப்பு பிரசார பயணத்தை அவா் தொடங்கினாா். தொடா்ந்து, தென்தாமரைகுளம் , சுவாமிதோப்பு, கரும்பாட்டூா் புத்தளம், தெங்கம்புதூா், மேலகிருஷ்ணபுதூா், பிள்ளையாா்புரம் , பொட்டல், புதூா் வழியாக ஈத்தாமொழி சந்திப்பில் பயணத்தை நிறைவு செய்தாா். இதில், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகர மாவட்டத் தலைவா் நவீன்குமாா், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி. உதயம், மாநில செயலா் வழக்குரைஞா் சீனிவாசன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் ஆதிலிங்கபெருமாள் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.