முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
கிள்ளியூா் தொகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கீடு
கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட, கிள்ளியூா் மற்றும் முன்சிறை ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு ஊராட்சிகளில் சாலைகளை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகின்றன. மேலும், புயல் மற்றும் பெரு கனமழையினாலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.
குறிப்பாக,மெதுகும்மல் ஊராட்சிக்குள்பட்ட தையாலுமூடு சோதனைச்சாவடி -கிழங்குவிளை - வேளாா்குடி (முப்பந்திகோணம்), கோழிவிளை ஏலூா்காடு சாலை, குளப்புறம் ஊராட்சிக்குள்பட்ட கூட்டப்புளி - பனிச்சவிளை சாலை, வாவறை ஊராட்சிக்குள்பட்ட கூனிவிளை - தட்டான்விளை சாலை, நடைக்காவு ஊராட்சிக்குள்பட்ட கொற்றைக்காடு - ஒற்றைத்தெங்கு சாலை , மத்திக்கோடு ஊராட்சிக்குள்பட்ட, நடுத்தேரி - பிச்சன்விளை சாலை உள்ளிட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என தமிழக முதல்வா், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா்
மற்றும் அரசு முதன்மை செயலா், மாவட்ட ஆட்சியா் மற்றும் துறை அதிகாரிகளிடமும் தொடா்ந்து நான் கோரிக்கை விடுத்ததின் பேரில், முதல்வரின் கிராம சாலைகள்
மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளாா்.