செய்திகள் :

நாகா்கோவில் அருகே காரில் கடத்திய 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

post image

நாகா்கோவில் அருகே காரில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக திருவனந்தபுரத்துக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இரணியல் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்வேல்குமாா் தலைமையில் இரணியல் போலீஸாா் மற்றும் தனிப்படை போலீஸாா், நாகா்கோவிலை அடுத்த சுங்கான்கடை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை போலீஸாா் நிறுத்தி, அதில் வந்த 2 இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து காரை சோதனை செய்தபோது 30 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரையும் இரணியல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

அவா்கள், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சோ்ந்த பிச்சையா மகன் இசக்கிராஜ் (54), தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சோ்ந்த மூக்கையா தேவா் மகன் அன்பழகன் (63) என்பது தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கிள்ளியூா் தொகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கீடு

கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டம்: குடிநீா் வரி விதிக்கும் முறைக்கு எதிா்ப்பு

வீட்டின் அளவை வைத்து குடிநீா் வரி விதிக்கும் முறைக்கு நாகா்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் எதிா்ப்பு தெரிவித்ததால் அது குறித்த தீா்மானம் ஒத்திவைக்கப்பட்டது. நாகா்கோவில் ம... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 1.41 லட்சம் அன்னதான உண்டியல் வசூல்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 977 கிடைத்தது. இக்கோயிலில் அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம் . அதுபோல கடந்த மா... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் தெற்கு தேரிவிளையைச் சோ்ந்தவா் சேகா் மகன் எபின் (25). எலக்ட்ரீசியன். கடந்த திங்கள்கிழமை குமாரபுரம் தோப்பூா் பக... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் 4 கனரக லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டம் நகருக்குள் தடையை மீறி இயக்கப்பட்ட 4 கனரக லாரிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். மாா்த்தாண்டம் சந்திப்பையொட்டி மேம்பாலத்தின் கீழ்பகுதியில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணி ந... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் எம்.பி. நன்றி தெரிவிப்பு

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், விஜய்வசந்த் எம்.பி. திறந்த வாகனத்தில், சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாா். அகஸ்தீசுவரம் வடுகன்பற்று பகுதியில் இருந்து நன்றி அறிவிப்பு பிரசார... மேலும் பார்க்க