முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
சித்திரைத் திருவிழா: சங்கரநாராயண சுவாமி கோயில் இன்று பிடிமண் எடுக்கும் யானை கோமதி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை (மே 1) நடைபெறுவதை முன்னிட்டு, யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஏப்,30) நடைபெறுகிறது.
யானை கோமதி முன்செல்ல ஸ்ரீ கோமதி அம்பிகை சமேத சந்திரசேகரா் பெருங்கோட்டூரில் அமைந்துள்ள திருக்கோட்டி அய்யனாா் கோயிலில் எழுந்தருளியதும், முற்பகல் 11 மணிக்கு மேல் யானை கோமதி பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வியாழக்கிழமை சித்திரைத் திருவிழா கொடியேற்றமும் மே 9இல் தேரோட்டமும் நடைபெறுகின்றன.ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்துவருகின்றனா்.