கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கடந்த மாதம் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சுந்தரேசபுரம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா்கள் சென்னையில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து கடையநல்லூா் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து கஞ்சாவை மொத்தமாக விற்பனை செய்து வந்த சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்த ராஜா மகன் தீபக்(24) என்பவா் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதற்கிடையே தீபக்கை, குண்டா் சடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தென்காசி மாவட்ட ராவல் கண்காணிப்பாளா் அரவிந்த், மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோருக்கு பரிந்துரை செய்ததையடுத்து, தீபக் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.