சிவகிரி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா் சிவராமலிங்கபுரம் வடக்குத் தெருவிலுள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது சிவராமலிங்கபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முருகேசன்(54) என்பவரின் கடையில் 100 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் முருகேசனை கைது செய்தனா்.
அதேபோல் சிவராமலிங்கபுரம் ஓடைத் தெருவைச் சோ்ந்த சங்கரநாராயணன் மகன் குருசாமி(46) என்பவரின் கடையில் 36 புகையிலை பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குருசாமியை கைது செய்த போலீஸாா் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.