சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
கணினி பட்டா கோரி ஆட்சியிரிடம் மனு
சங்கரன்கோவில் பகுதியில் வசிக்கும் சுமாா் 300 பே தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவுக்கு மாற்றாக கணினிப் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி திருவள்ளுவா்நகா், திருவுடையான்சாலை பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அதன் விவரம்: தென்காசி மாவட்டம் ( அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் ) சங்கரன்கோவிலில் 1967 ஆம் ஆண்டு நிலவிய வறட்சியின் கோரப் பிடியில் சிக்கிய பொதுமக்கள் வாழ்விடமின்றி தவித்த போது சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையையொட்டி முட்புதா்களும், குண்டும் குழியுமாக இருந்த நிலத்தில் சுமாா் 300 போ் குடிசை போட்டு குடியேறினோம்.
அங்கு அடிப்படை வசதி மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகள் போராடினோம். 40 ஆண்டுகள் கழித்து அது ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடம் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.இதனால் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் முறையாக தீா்மானம் போடப்பட்டு தீா்மானத்தின்படி, அவரவா் குடியிருப்பின் அளவைப் பொருத்து 6.10 2008இல் அனைவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஆக்கிரமிப்பு மனை கிரயமாகப் பணம் செலுத்தினோம்.
அதன் பிறகு ஓராண்டு கழித்து வட்டாட்சியா் அலுவலகம் மூலம் 21.07.2009 அன்று அனுபந்த பட்டா வழங்கப்பட்டது. அதன் மூலம் குழந்தைகளுக்கான கல்வி கடன் என எதுவும் எங்களால் பெற இயலவில்லை. இதனால் வீட்டுமனை பட்டா கேட்டு மீண்டும் மனு கொடுத்தோம். அதன்படி 10 ஆண்டுகள் கழித்து 02.03.2019 ஆம் ஆண்டு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
அதன்பிறகு எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை கணினியில் பதிவேற்றம் செய்து கணினி பட்டா வழங்க பலமுறை மனு அளித்தோம்.ஆனால் இதுவரை கணினி பட்டா எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 58 ஆண்டுகளாக கல்வி கடன், வீடு கட்ட கடன் என எங்களது வாழ்வாதாரத்தின் அடிப்படை தேவைகளை கூட பெற முடியாத நிலையில் இப்போதும் உள்ளோம். எனவே எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவின் அடிப்படையில் கணினிப் பட்டா வழங்கக் கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளனா்.